மடந்தை
மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும். ’ ’’ [ 15 -18] வீட்டுக்கு வீடு வாசப்படி” என்பது போல் சொல்லொணாத்துயரங்கள் இல்லாத மானுடபிறவியே இல்லை எனலாம். எல்லாக் கடின முயற்சிகளும் தோற்ற பின்னரே ஜாதகம் ,ஜோசியம் , பூஜைகள் ,வண்ண வண்ணமாய் அதிர்ஷ்ட கற்கள் என மனித மனம் அடைக்கலம் தேடும்.அப்படி நிர்கதியாய் நின்ற ஒரு வயது முதிர்ந்த உறவினருக்காக ‘அவளுடைய ‘ தாய் அந்த 40 வயது ஜோசியரை வீட்டுக்கு வரவழைத்தார் .ஆர்வக்கோளாறாகிய அவள் பெரியவர்களுடன் அமர்ந்து ஒன்றும் புரியாவிடினும் வாய் பார்த்து அமர்ந்திருந்தாள்.அவர்களுக்கு பல விஷயங்களை விளக்கி சொல்லும் போதே “பாப்பா யாரு?என்ன படிக்குது? என்றவாரே செல்லமாய் முகவாய் தொட நீண்ட கைகளிலிருந்து வெடுக்கென நகர்ந்து அமர்ந்தாள். வயதுக்கு மீறிய ‘முதிர்ச்சி மூளை’ அவரை கண்காணிக்க தொடங்கியது .ஆனால் முழுமையாக ,தெளிவாக விளங்கவில்லை.அந்த உறவினரின் மகனுக்கு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று விவரித்துக் கொண்டே “நீங்க என்ன பண்ணுங்க , பெண் பாக்க போகும்போது அந்த பெண்ணோட பேச்சு குடுத்துகிட்டே இப்படி தொட்டு பாருங்க” என சட...