மூவர்ணம்
மூவர்ணம் பச்சை பசேலென்ற வயல்வெளிகளும் ,ஓங்கி உயர்ந்த வானளாவிய நெடிய மரங்களும் ,சூரிய ஒளியில் மின்னும் வெள்ளி நீரோடைகளும்,ரத்தின கம்பளத்தில் சுருட்டப்பட்ட தங்க பேழையை போல இயற்கை எழில் மிகுந்து விளங்கும் சிறிய கிராமம் தான் சிகையூர் .தேவ தச்சன் மயன் உருவாக்கியதோ என காண்போரை வியக்க வைக்கும் அழகிய மருதம் சூழ்ந்த குறிஞ்சி நிலம். ஊர் தலைவரின் பெரு முயற்சியால் எழுந்த கல்வி கூடமும், நூலகமும் ஊர் முன்னேற்றத்தின் முதல் படி. ஈசன்,அகிலன்,இருளன் மூவரும் இணை பிரியாத நண்பர்கள்.இவர்களுக்கு படிப்பிலும்,விளையாட்டிலும் இன்ன பிற செயல்களிலும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல எனும் கடும் போட்டியாளர்கள் சிகப்பி, நிலா, இலஞ்சி என்னும் உயிர் தோழிகள் .எவ்வளவு போட்டி இருந்தாலும் பொறாமை இருந்ததில்லை.அந்த அறுவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொட...