வெண்ணிலா
வான் மங்கை அட்டிகையின் வனப்பு மிகு வைரமே வெண்ணிலாவே ! நீ வெண்பஞ்சு மேகத்தில் வெடிக்காத பருத்தியாய் கருங்கிணற்று வானத்தின் கீழ் கிடக்கும் துளி நீராய் விழி விசும்பின் வனப்புமிகு பாவையாய் சின்மலர் விண்மினிடையே சிங்கார பெருமலராய் போட்டியின்றி தேர்வான உலக அழகியாய் உலா வரும் கோலமிகு அழகினை அமிழ்தமாக பருகாத ஆருயுரும் உளதோ? இரவியின் செம்முகம் மறைந்தபின் ; இரவின் தொடக்கமாய் வெண்முகம் காட்டும் வெண்ணிலாவே! திங்களென்று பெயர் பெற்றும் ஒரு திங்கள் முழுதாய் நிலைக்காததேன் ! நிலையற்ற மனித வாழ்வை உணர்த்திடவா ! --- தாமரை குணாளன் --