பேதை

பேதை      
    ‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.5 முதல் 8 வயது வரையிலான பெண் பருவத்தை  பேதை என சங்க இலக்கிய குறிப்பு தெரிவிக்கிறது.
                 அவளுக்கு அப்போது 6 வயது. பள்ளியில் சேர்க்கவில்லை.4 வயதில் L.K.G சேர்க்கப்படும் 80 களில் இளையோர் கல்வி கற்க தொடங்கி சீருடை அணிந்து பள்ளி செல்லும் காலத்திலும் கல்வியின்றி பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்துகொண்டிருந்தாள்.தாய்மைக்கே உரிய தவிப்புடன் அவள் தாய் தவியாய் தவித்திருந்தார் பள்ளியில் சேர்க்க.அந்த சிறிய ஊரில் கான்வென்ட்டுக்கு  இணையான ஒரு சிறந்த பள்ளி உண்டு.அப்பள்ளியில் பிள்ளைகளை கொண்டு விட பட்டம் பெற்ற  பெற்றோரே  அஞ்சுவர்.ஏனெனில் அப்பள்ளி நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர் சின்ன மிஸ் என்று அழைக்கப்படுபவர் ஆங்கிலோ இந்திய பெண்மணி.ஆங்கிலம் மட்டுமே பேசுவார்.இப்படியே பயந்தால் பிள்ளை தற்குறியாகிவிடுமே என கலங்கினார் தாயார் ,ஆங்கில எழுத்துக்களையும் ,'ஏ' -ஆப்பிள் என்ற எழுத்து அடையாள பாடத்தையும் சொல்லிகொடுத்து கூட்டிச் சென்றார் அந்த E.S.L.C தாய்.அட்மிஷன் அன்றே உறுதியானது .1980 லேயே ரூ.60 / மாதம் கட்டணம் வாங்கும் பள்ளி.சீருடை, புத்தகம் ,லொட்டு லொசுக்கு என அனைத்துக்கும் பணம் காட்ட வேண்டும்.அனைத்தும் பள்ளியே பார்த்துக்கொள்ளும்
      முதல் நாள் பள்ளிக்கு சென்றாள்.வாகனம் , அம்மாவின் இடுப்பு.. ரிக் ஷா    ஏற்பாடு செய்வதாக  தாய் கெஞ்சினார்.அவள் முடியாது என்றாள்.முரட்டு பிடிவாதக்காரி .வீட்டில் வேலை செய்யும் ஆயாவை கொண்டு விட சொல்வதாக மன்றாடினார்.தமையனையும், தமக்கையையும் பள்ளிக்கு அதே நேரத்திற்கு தயார் செய்ய முடியாமல் திணறினார்.வேறு வழியின்றி தூக்கிகொண்டு கேட்டின் அருகே இறக்க முற்படுகையில் பெருங்குரலெடுத்து அலறி இறங்க மறுத்து கழுத்தறுப்பாள்.
      6 வயதுக்கு மீறிய அதீத முதிர்ச்சி எப்பொழுதும் வெளிப்படும்.வயதில் மிகவும் மூத்தவர்கள் செய்யும் தவறையும் கூர்ந்து கவனித்து சுட்டிக்காட்டி குட்டை உடைப்பதே அவள் வேலை.அனல் தெறிக்கும் கோவக்காரி.தெருவில் விற்கும் பண்டங்களை வாங்கி தராத குடும்பத்தில் வளர்ந்ததால் ,சிலோன் மாமாவிடம் மட்டுமே ஐஸ் க்ரீம் வாங்கி தரப்படும்.. அதுவும் கலர் வேபர் கோனுக்கு அனுமதியில்லை.வீட்டிலிருந்து கொடுக்கப்படும் பீங்கான் கோப்பையில் மட்டுமே வாங்க வேண்டும்.துணிச்சலும் தூக்கலாச்சே !! "அம்மா ,எனக்கு வேபர் ல தான் வேணும் என்றாள். பாட்டி பார்த்தா திட்டுவாங்க கப்பிலேயே வாங்கிக்க என்று கூறி 10 ருபாய் [இன்றைய நூறுக்கு  சமமாய் இருக்கலாம்] கொடுத்து மீதி வாங்கி வா என்றார்.முரட்டு கோவத்தோடு அனைவரும் பார்க்க ருபாய் நோட்டை இரண்டாய் கிழித்து வீசி விட்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.விளக்கபடாத ,மறுத்தல் மற்றும் கட்டளையை ஏற்க இயலாதவள்.கோபக்கார பிசாசு என பட்டம் சூட்டப்பட்டாள் ........
                                                                                                                                                       
  

Comments

  1. அவள் இப்போதும் கோபக்காரி,பிடிவாதகாரிதானே ?

    ReplyDelete
  2. பேதை , பெதும்பையாகி, மங்கை மடந்தையாகி, அரிவை தெரிவையாகி பேரிளம் பெண்ணாகிய போது "கோபம்" ரௌத்திரமாக , பிடிவாதம் "வைராக்கியமாக பரிணாமம் பெற்றது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கர்மா

மடந்தை