லக்ஷ்மிக்கு’ தாமரையின் தராசு.
இந்த
லக்ஷ்மி குறும்படத்தின் கருத்துகணிப்பு வயது ரீதியாகவும் ,வளர்ந்த சூழல்
சார்ந்தும் மாறுபடும்.சேகர்களை விட கதிர்களே இச்சமுதாயத்தில் அதிகம்.
இயந்திரத்தனமான
வாழ்வு மன சிதைவையும் சுணக்கத்தையும் கொடுத்தே தீரும் .மறுக்க முடியாத உண்மை.அதை கையாள்வதில்
இரண்டு வகை அணுகுமுறை இருக்கும்.அறிவுபூர்வமானதாக கருதப்படும் [IQ based –intelligent quotient] மற்றும் உணர்வுபூர்வமான அணுகுதல்[EQ based-emotional
quotient].எல்லா நிகழ்வுகளுக்கும்
முதல் வகை அணுகுமுறை உதவாது.மேலும் அபத்தமாகவும் இருக்கும்.எடுத்துக்காட்டாக தன்
கணவனை இழந்த பெண்ணிடம்,” ஆன்மாவுக்கு அழிவில்லை, பிறப்போர் எல்லாம் இறந்தே ஆக
வேண்டும்.இதுவே நியதி “ என்று வேதாந்தம் ,சித்தாந்தம் பேசுவது வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சுவது போலாகும்.அதே நேரத்தில் ,”உன்னுடைய இழப்பு ஈடு காட்ட முடியாதது தான்
,உன் குழந்தைகளின் எதிர் காலத்தை வளமாக்கி தருவதற்கு நீ இரட்டிப்பு சக்தியுடன்
செயல் படவேண்டியுள்ளது” எனும் இரண்டாவது வகை ஆறுதல் பலம்மிக்கது ,பலனளிப்பது.தற்கொலை
எண்ணம் வரும் நேரம் EQ வை IQ மிஞ்சவேண்டும்.
இப்படத்தில் லக்ஷ்மியின் நிலை வருந்துதலுக்குரிய
நிதர்சனமான பரிதாபமே.ஆனால் தீர்வு அவள் தேர்வு செய்ததன்று.அதுவா பெண் சுதந்திரம்
இல்லவே இல்லை அது self exploitation ஆகும் . ஒரு ஆண் செய்யும் எதையும் கண்ணாடி பிம்பமாய் பெண் பிரதிபலித்தால் தான்
பெண்ணுரிமை என எந்த முட்டாள் வரையறுத்தது.உதாரணமாக தந்தை தன் 14 வயது மகளை பாலியல்
வன்கொடுமை செய்த நிகழ்வுகளை அறிவோம் .அச்செயலுக்கு இணையாய் ஒரு தாய் தன் மகனுடன் உறவாடல்
சாத்தியமா.இதுதான் பெண் சமஉரிமையா ?பெண் சுதந்திரமா?.
தனக்கான சம்பாத்தியம் இருக்கும்”லக்ஷ்மிகளால்”
தன் சூழ்நிலை விலங்கை நேர்மையாக , நெறியாக
,தனி மனித ஒழுக்கத்தோடு அறுத்தெறிய முடியாதா?.”ரௌத்திரம் பழகு” எனும் அதே
பாரதியின் வெகுண்ட சக்தியாய் “சேகர்களை” வீசியெறிந்து நிர்பந்த சங்கிலியை
வெட்டியெறிய முடியாதா?.உரிமையை போல தனிமனித ஒழுக்கமும் ஆணுக்கும் பெண்ணுக்கும்
சமமே.தறிகெட்டு நெறிகெட்டு நிலைநாட்டும் சுதந்திரம் வெறுக்கத்தக்கது ,அருவருக்கத்தக்கது.
லக்ஷ்மியின் செயல்பாடு சரியெனில், சேகருடன் தொடர்பு
கொண்டிருக்கும் இன்னொரு பெண்ணும் சரிதானே.....
கதிர்களுக்கும் ,கள்ளத்தொடர்பாளர்களுக்கும்
பெரிதாய் ஒன்றும் மதிப்பீடு வித்தியாசம் இல்லை.பலகீனத்துக்கு ஆறுதலாய் இருப்பவன்
யோக்கியன்.ஆறுதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்பவன் அதன் எதிர்மறை.எனினும்
பூனையில் சைவம் இருப்பதாக இதுநாள் வரை தகவல் இல்லை..........
---தாமரை குணாளன் --
சிறுகதை "லக்ஷ்மி" பற்றி சிறந்த விமர்சகம .. மேடம், சிறந்த ஒன்று
ReplyDeleteநன்றி.தொடர்ந்து அளவளாவலாம்.
Deleteஉங்கள் விமர்சனம் கண்டபின் லக்ஷ்மியும் பார்த்தேன் .ஒரு வேலைகாரியாய் மட்டுமே கணவன் அவளை காண்கிறான் .
ReplyDeleteஅன்பு இருக்கும் இடம் மனம் தாவுவது இயல்புதானே .தவறு ,சரி என எதுவும் நான் சொல்ல வரவில்லை.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள் தோழி .
ஷாகுல் ஹமீது