Posts

BOLD Vs BEAUTY

Image
            BE BOLD FOR CHANGED-WOMEN IN THE CHANGING WORLD OF WORK                                                Being bold, what does that mean,     is that mean u learn martial arts-say kyaa!   , carry a pocket knife, a pepper spray.. absolutely not. the raw material for being bold is confidence, self confidence..not over confidence.                   Which one concretes   your self confidence? is that the so called   looks ,big black eyes with long lashes , a brown lens ,   a blue sclera.., painted lips, sharp nose ,fairer complexion, shiny tan skin ,waxed legs , wavy burgandy curly hair on your shoulder ,turquoise cascades of long hair till your waistline , curves and flesh ….wanna fall in   goat line of ‘yet an ..Other pretty face’ rather than a performer. Is that not sucks. What else sd be the building block of self confidence ?    Knowledge   ,wisdom ,intelligence, the way you carry yourself and crown yourself with self respect   and prestige,real power within

மூவர்ணம்

                                        மூவர்ணம்      பச்சை பசேலென்ற வயல்வெளிகளும் ,ஓங்கி உயர்ந்த வானளாவிய நெடிய மரங்களும் ,சூரிய ஒளியில் மின்னும் வெள்ளி நீரோடைகளும்,ரத்தின கம்பளத்தில் சுருட்டப்பட்ட தங்க பேழையை போல இயற்கை எழில் மிகுந்து விளங்கும் சிறிய கிராமம் தான் சிகையூர் .தேவ தச்சன் மயன் உருவாக்கியதோ என காண்போரை வியக்க வைக்கும் அழகிய மருதம் சூழ்ந்த குறிஞ்சி நிலம். ஊர் தலைவரின் பெரு முயற்சியால் எழுந்த கல்வி கூடமும், நூலகமும் ஊர் முன்னேற்றத்தின் முதல் படி.        ஈசன்,அகிலன்,இருளன் மூவரும் இணை பிரியாத நண்பர்கள்.இவர்களுக்கு படிப்பிலும்,விளையாட்டிலும் இன்ன பிற செயல்களிலும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல எனும் கடும் போட்டியாளர்கள் சிகப்பி, நிலா, இலஞ்சி என்னும் உயிர் தோழிகள் .எவ்வளவு போட்டி இருந்தாலும் பொறாமை இருந்ததில்லை.அந்த அறுவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காத வளமான நட்பு பாராட்டி வந்தார்கள்.அந்த 14 வயதுக்கே உரிய குறும்புத்தனமும்,விளையாட்டுத்தனமும்,போக்கிரித்தனமும் எல்லை மீறாமல் ரசிக்கும்படியாகவே இருந்தது.பள்ளியிலும்,ஊர் மக்களிடமும் நற்பெயருடன் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப

மடந்தை

Image
மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும். ’ ’’   [ 15 -18]    வீட்டுக்கு வீடு வாசப்படி” என்பது போல் சொல்லொணாத்துயரங்கள் இல்லாத மானுடபிறவியே இல்லை எனலாம். எல்லாக் கடின முயற்சிகளும் தோற்ற பின்னரே ஜாதகம் ,ஜோசியம் , பூஜைகள் ,வண்ண வண்ணமாய் அதிர்ஷ்ட கற்கள் என மனித மனம் அடைக்கலம் தேடும்.அப்படி நிர்கதியாய் நின்ற ஒரு வயது முதிர்ந்த உறவினருக்காக ‘அவளுடைய ‘ தாய் அந்த 40  வயது ஜோசியரை வீட்டுக்கு வரவழைத்தார் .ஆர்வக்கோளாறாகிய அவள் பெரியவர்களுடன் அமர்ந்து ஒன்றும் புரியாவிடினும் வாய் பார்த்து அமர்ந்திருந்தாள்.அவர்களுக்கு பல விஷயங்களை விளக்கி சொல்லும் போதே “பாப்பா யாரு?என்ன படிக்குது? என்றவாரே செல்லமாய் முகவாய் தொட நீண்ட கைகளிலிருந்து வெடுக்கென நகர்ந்து அமர்ந்தாள். வயதுக்கு மீறிய ‘முதிர்ச்சி மூளை’ அவரை கண்காணிக்க தொடங்கியது .ஆனால் முழுமையாக ,தெளிவாக விளங்கவில்லை.அந்த உறவினரின் மகனுக்கு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று விவரித்துக் கொண்டே “நீங்க என்ன பண்ணுங்க , பெண் பாக்க போகும்போது அந்த பெண்ணோட பேச்சு குடுத்துகிட்டே இப்படி தொட்டு பாருங்க” என சட்டென்று அந்த 15 வய

வெண்ணிலா

Image
   வான் மங்கை அட்டிகையின்   வனப்பு மிகு வைரமே   வெண்ணிலாவே ! நீ வெண்பஞ்சு மேகத்தில் வெடிக்காத பருத்தியாய் கருங்கிணற்று வானத்தின்   கீழ் கிடக்கும் துளி நீராய் விழி விசும்பின் வனப்புமிகு பாவையாய் சின்மலர் விண்மினிடையே சிங்கார பெருமலராய் போட்டியின்றி தேர்வான உலக அழகியாய் உலா வரும் கோலமிகு அழகினை அமிழ்தமாக பருகாத ஆருயுரும் உளதோ? இரவியின் செம்முகம் மறைந்தபின் ; இரவின் தொடக்கமாய் வெண்முகம் காட்டும் வெண்ணிலாவே! திங்களென்று பெயர் பெற்றும் ஒரு திங்கள் முழுதாய் நிலைக்காததேன் ! நிலையற்ற மனித வாழ்வை உணர்த்திடவா ! --- தாமரை குணாளன் --

யாருக்கு யாரோ ?

Image
                                                                                                                                  செய்யூர் என்னும் கிராமத்தில் வரதன், கோலப்பன் ,விக்கிரமன் என்னும் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.                                                                                                                                                                  வரதன் பெருந்தொப்பையுடன், சற்று குள்ளமான உருவமுடையவனாய், பதத்துக்கு மீறி வறுக்கப்பட்ட கோதுமையின் நிறத்தில் இருப்பான். இடதும் வலதுமாக சற்று ஆடி ஆடி அவன் நடந்து வருகையில் ,பலர் மனதுக்குள்ளும்,சிலர் வெளிப்படையாகவும் அவன் தோற்றத்தையும்,நடையையும் பரிகாசம் பண்ணுவது வழக்கம்.அவன் சட்டி ,பானை செய்யும் குயவன்.                                                                                                                                              கோலப்பன், தோற்றத்தில் வரதனுக்கு நேர் எதிர்மறையாக இருப்பான்.நெடுநேடுவென்று   வளத்தியாக,சதையை சுத்தமாக வழித்தெடுத்தது போல ஒடுங்கிய உடல் கூறு.சாரை பாம்பு போல வி

கர்மா

Image
                                                                            வினை விதைத்தவன் வினை அறுப்பான் ,தினை விதைத்தவன் தினை அறுப்பான். விதையின்(கர்மா) அறுவடை(பலன்) நாளானது ஒவ்வொரு விதைக்கும் மாறுபடும் .சில விதை உடனே முளைக்கும், சிலது வருடக்கணக்கில் காத்திருந்து முளைக்கும்.     மரம்,செடி,கொடி,வேளாண்மை போலில்லாமல்  கர்மாவில் துரதிஷ்டவசமாக, விதைக்கப்படும் எல்லா விதைகளும் முளைத்தே தீரும். அறுவடை செய்யவே பணிக்கப்படும்.அறுவடைக்கான கருவி அவரவராகவே இருக்கலாம் அல்லது வேறு ஒருவராக இருக்கலாம் .கர்மா என்பது விதைப்பது மட்டுமல்ல ,விதைத்ததன் பயனை அனுபவிப்பதும் தான்.      ஜனனம் , [ வாழ்க்கை ] பயணம் , மரணம் , மறுஜென்மம் ( மறுஜென்மம் உண்டா என்பதற்கு  சான்று கொடுத்து நிரூபிக்கவோ அல்லது ஆதாரமற்றதை பொய் , புரளி என ஒதுக்குவதற்கோ இது அறிவியல் இல்லை ) என வாழ்வை  அனைத்து நிலைகளிலும் நிர்ணயிக்கும் விசையானது இந்த கர்மா.ஒருவருக்கு கர்ம வினையின் ஆழத்தை விளக்கி புரிய வைப்பது கடினம்.வாழ்வின் நிகழ்வுகளை ஆராய்ந்து ,அறிந்து ,தெரிந்து ,தெளிந்தால்

லக்ஷ்மிக்கு’ தாமரையின் தராசு.

  https://youtu.be/vP 5 dOY 42 DKI   இந்த லக்ஷ்மி குறும்படத்தின் கருத்துகணிப்பு வயது ரீதியாகவும் ,வளர்ந்த சூழல் சார்ந்தும் மாறுபடும்.சேகர்களை விட கதிர்களே இச்சமுதாயத்தில் அதிகம்.                                            இயந்திரத்தனமான வாழ்வு மன சிதைவையும் சுணக்கத்தையும்  கொடுத்தே தீரும் .மறுக்க முடியாத உண்மை.அதை கையாள்வதில் இரண்டு வகை அணுகுமுறை இருக்கும்.அறிவுபூர்வமானதாக கருதப்படும் [IQ based –intelligent quotient] மற்றும் உணர்வுபூர்வமான அணுகுதல்[ EQ based-emotional quotient]. எல்லா நிகழ்வுகளுக்கும் முதல் வகை அணுகுமுறை உதவாது.மேலும் அபத்தமாகவும் இருக்கும்.எடுத்துக்காட்டாக தன் கணவனை இழந்த பெண்ணிடம்,” ஆன்மாவுக்கு அழிவில்லை, பிறப்போர் எல்லாம் இறந்தே ஆக வேண்டும்.இதுவே நியதி “ என்று வேதாந்தம் ,சித்தாந்தம் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும்.அதே நேரத்தில் ,”உன்னுடைய இழப்பு ஈடு காட்ட முடியாதது தான் ,உன் குழந்தைகளின் எதிர் காலத்தை வளமாக்கி தருவதற்கு நீ இரட்டிப்பு சக்தியுடன் செயல் படவேண்டியுள்ளது” எனும் இரண்டாவது வகை ஆறுதல் பலம்மிக்கது ,பலனளிப்பது.தற்கொலை எண்ணம் வரும் நேர